Showing posts with label முப்பொழுதும் உன் கற்பனைகள். Show all posts
Showing posts with label முப்பொழுதும் உன் கற்பனைகள். Show all posts

Friday, November 30, 2012

கண்கள் நீயே காற்றும் நீயே-முப்பொழுதும் உன் கற்பனைகள்


திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்ரா
இசை:  G.V. பிரகாஷ்
வரிகள்: தாமரை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

Wednesday, September 12, 2012

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ- முப்பொழுதும் உன் கற்பனைகள்

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்