Showing posts with label அழகி. Show all posts
Showing posts with label அழகி. Show all posts

Sunday, September 23, 2012

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா-அழகி


படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்: சாதனா சர்கம்

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்கலமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி
பாட்டு சொல்லி..

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாரறிவார்
வாழ்க்கை செல்லும் பாதை தனை யாருரைப்பார்

இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை
பாட்டு சொல்லி..

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்

அன்று சென்ற இளம் பருவம் அது என்ன என்ன மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை
பாட்டு சொல்லி..