Showing posts with label தர்மத்தி்ன் தலைவன். Show all posts
Showing posts with label தர்மத்தி்ன் தலைவன். Show all posts
Sunday, September 23, 2012
தென்மதுரை வைகை நதி-தர்மத்தி்ன் தலைவன்
படம் : தர்மத்தி்ன் தலைவன்
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை..........
நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை..........
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் இன்று
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை..........
Subscribe to:
Posts (Atom)